வங்கி கணக்கு Lock ஆகிவிட்டதா? Activate செய்வது எப்படி?



எந்தவொரு சேவையாக இருந்தாலும் அதை முழுமையாக பெற நாமும் சில செயல்களை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். வங்கியில் கணக்கை ஆரம்பித்து பணப்பரிவர்த்தனை செய்யாமலிருந்தால் வங்கி கணக்கு Lock செய்யப்படும். எனவே வங்கியின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வங்கி கணக்கில் தொடர்ந்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். ஒரு வேளை வங்கி கணக்கு Lock செய்யப்பட்டிருந்தால் ஏன் Lock செய்யப்படுகிறது, அதை எவ்வாறு Activate செய்யலாம் போன்ற விவரங்களை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

 

1.  முதலில் வங்கி கணக்கை unlock செய்ய விண்ணப்பிக்கும் முன்பு வங்கி கணக்கில் குறைந்தது ரூ. 100/- ஐ lock செய்யப்பட்ட வங்கி கணக்கில் டெபாசிட் செய்து கொள்ள வேண்டும்.

 

2.  பின்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் (Link) ஐ கிளிக் (Click) செய்து அதில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவேண்டும்.

 

 

3.  விண்ணப்பத்தில் விடுபட்டுள்ள இடங்களில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி வங்கி கணக்கின் விபரம் போன்றவற்றை சரியாக எழுத வேண்டும். விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் கையெழுத்து (Sign) தெளிவாக இருக்க வேண்டும்.

 

4.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) கொடுக்க வேண்டும்.

 

5.  வங்கி கணக்கை Activate செய்ய கோரி விண்ணப்பித்த பிறகு வாடிக்கையாளர் கணக்கை Unlock செய்யப்படும்.

 

    மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி வங்கி கணக்கை Activate செய்து கொள்ளலாம்.

பின்வருபவை வங்கி கணக்கு Activate செய்வது தொடர்பான கேள்விகளும் பதில்களும்....

 

1. Activate செய்ய எந்த கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்?

    வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் அதாவது lock செய்யப்பட்ட வங்கி கணக்குள்ள வங்கியில் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

2. வாடிக்கையாளர் வங்கிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமா?

ஆம். கண்டிப்பாக வாடிக்கையாளர் நேரில் வங்கிக்கு சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.

3. விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?

வாடிக்கையாளரின் வங்கி கணக்கின் Passbook மற்றும் ஆதார் அட்டை ஐ விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சில நேரங்களில் வங்கி சமர்பிக்கக்கோரும் வேறு ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

4. வங்கி கணக்கு ஏன் Lock செய்யப்படுகிறது??

வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் நீண்ட காலமாக பரிவர்த்தனை மேற்கொள்ளாமல் இருக்கும் போது, அந்த வங்கி கண்ணகை வேறு யாரேனும் முறைகேடாக பயன்படுத்தி ATM மூலம் பணம் எடுத்தல், வேறு கணக்கிற்கு பணத்தை மாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க அந்த வங்கி கணக்கு உடனடியாக Lock செய்யப்படுகிறது.

5. எப்பொழுது வங்கி கணக்கு Lock செய்யப்படும்?

வங்கி கணக்கில் கடந்த 6 மாதங்களாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளாத போது கணக்கு Lock செய்யப்படும்.

6. கடந்த 6 மாதங்களாக வாடிக்கையாளரின் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தாலும் கணக்கு Lock செய்யப்படுமா?

ஆம். வங்கி கணக்கில் 6 மாதங்களாக பற்று மற்றும் வரவு (Debit and credit) என 2 பரிவர்த்தனைகளும் நடந்திருந்தால் மட்டுமே வங்கி கணக்கு Lock செய்யப்படமாட்டாது.

7. Lock செய்யப்பட்ட வங்கி கணக்கில் பணத்தை (Withdraw) எடுக்க முடியுமா?

முடியாது. வங்கி கணக்கு Lock செய்யப்பட்டிருந்தால் கணக்கிலிருந்து பணத்தை (Withdraw) எடுக்கமுடியாது.

8. வங்கி கணக்கு Lock செய்யப்பட்டிருக்கும் போது பணத்தை டெபாசிட் செய்யலாமா?

வங்கி கணக்கு Lock செய்யப்பட்டிருந்தாலும் வங்கி கணக்கில் யார் வேண்டுமானாலும் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

9. Lock செய்யப்பட்ட வங்கி கணக்கில் எந்தெந்த சேவை அனுமதிக்கப்படாது?

வங்கி கணக்கு Lock செய்யப்பட்டிருக்கும் போது கீழ்கண்ட வங்கி சேவைகளை பெறமுடியாது.

  • i . ATM கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.
  • ii . இன்டர்நெட் வங்கி சேவை பயன்படுத்த முடியாது.
  • iii. மொபைல் செயலி (Mobile app) சேவை பயன்படுத்த முடியாது.

10. Unlock செய்வதற்கு முதலில் ஏன் பணத்தை டெபாசிட் செய்யவேண்டும்?

6 மாதங்களுக்கும் மேலாக வங்கி கணக்கு எந்தவித பரிவர்தனையும் இல்லாததால், அந்த வடிக்கையாளரே இனி அந்த கணக்கை தொடரும் பொருட்டு குறைந்தபட்ச தொகையை (உதாரணமாக ரூ 100/-) டெபாசிட் செய்ய வேண்டும்.

11. வங்கி கணக்கை Activate செய்ய எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்.

;ஒவ்வொரு வங்கியை பொறுத்து கட்டணம் மாறுபடும். குறைந்தது ரூ. 100/- முதல் 200/- வரை வசூலிக்கப்படும்.

 

11. Activate செய்தபின்பும் கணக்கு Lock ஆகிவிட்டால் மீண்டும் activate செய்யலாமா?

செய்யலாம். மீண்டும் 6 மாதங்களாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளாதபோது வங்கி கணக்கு Lock செய்யப்படும். மேற்கண்டவாறு விண்ணப்பித்து activate செய்துகொள்ளலாம்.

12. பல வருடங்களாக வங்கி கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் activate செய்யமுடியுமா?

அதிகபட்சமாக 10 வருடங்களாக வங்கி கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே Activate செய்ய முடியும். 10 வருடங்களுக்கு மேல் வங்கி கணக்கை உபயோகிக்காமல் இருந்தால் வங்கி மேலாளரை அணுகி அவர் கூறும் வழிமுறைகைளை பின்பற்ற வேண்டும்.