வங்கி கணக்கில் தொலைபேசி எண்ணை மாற்றுவது எப்படி?



மனிதர்களும் தொலைபேசியும் பிரிக்கமுடியாதவைகளாக மாறிவிட்ட இக்காலத்தில் அனைத்து விசயங்களும் தொலைபேசியில் பதிவு செய்து கொள்கிறோம். அது போல தொலைபேசி எண்ணை வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் வங்கியில் மேற்கொள்ளும் எந்தவொரு பணபரிவர்த்தனையும் குறுஞ்செய்திகள் மூலம் வாடிக்கையாளரின் தொலைபேசிக்கு தகவல்கள் வந்துசேரும்.

 

எனவே வாடிக்கையாளர்கள் தங்களது தொலைபேசி எண்ணை மாற்றினால் உடனடியாக வங்கிக்கு புதிய தொலைபேசி எண்ணை தெரியப்படுத்த வேண்டும். வங்கி கணக்கில் உள்ள தொலைபேசி எண்ணை எவ்வாறு மாற்றலாம் என்பதை பின்வரும் வழிமுறைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்...

 

1.  முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் (Link) ஐ கிளிக் (Click) செய்து அதில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவேண்டும்

 

 

2.  விண்ணப்பத்தில் விடுபட்டுள்ள இடங்களில் வாடிக்கையாளரின் சரியான தகவல்களை நிரப்ப வேண்டும். விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் கையெழுத்து (Sign) தெளிவாக இருக்க வேண்டும்.

 

3.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) அளிக்க வேண்டும்.

 

4.  தொலைபேசி எண்ணை வங்கி கணக்கில் மாற்றக்கோரிய விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்டு வங்கி கணக்கில் புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளப்படும். அதன் பிறகே வாடிக்கையாளர் மேற்கொள்ளும் பணபரிவர்த்தனைகளும் மற்றபிற சேவைகளுக்குரிய குறுஞ்செய்திகளும் வாடிக்கையாளரின் புதிய தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்.

 

     மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி வங்கி கணக்கில் தொலைபேசி எண்ணை எளிதாக  மாற்றிக் கொண்டு வங்கியின் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.

 

வங்கியில் தொலைபேசி மாற்றுவது தொடர்பான கேள்விகளும் பதில்களும்

1. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வேறு ஆவணங்கள் எதாவது சமர்ப்பிக்க வேண்டுமா?

ஆம். கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு வாடிக்கையாளரின் தனிநபர் ஆவணங்களான ஆதார் அட்டை அல்லது பான் கார்டை உடன் இணைக்கவேண்டும் மற்றும் வாடிக்கையாளரின் வங்கி கணக்கின் பாஸ் புக்கையும் விண்ணப்பத்தோடு இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

2. வாடிக்கையாளரே வங்கிக்கு நேரில் சென்று விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டுமா?

ஆம். பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் ஆவணங்களோடு வாடிக்கையாளரே நேரடியாக வங்கிக்கு சென்று உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) விண்ணப்பத்தினை கொடுக்க வேண்டும்.

3. எத்தனை நாட்களுக்குள் புதிய தொலைபேசி எண் பதிவு செய்யப்படும்?

விண்ணப்பம் கொடுத்த 2 முதல் 3 தினங்களுக்குள் வங்கி கணக்கில் புதிய தொலைபேசி எண்ணை பதிவு செய்து கொள்ளப்படும். 

4.குறுந்தகவல்களுக்குரிய கட்டணத்திற்கு யார் பொறுப்பு?

வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்தி மற்றும் தகவல்களுக்கு வங்கியிலிருந்து அதற்கென தனியாக ஒரு சிறிய தொகை வாடிக்கையாளர் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை எவ்வளவு என்று வாடிக்கையாளர்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

5.ஒரு வங்கி கணக்கிற்கு எத்தனை தொலைபேசி எண்களை இணைக்கலாம்?

வாடிக்கையாளர் ஒரு வங்கி கணக்கிற்கு ஒரு தொலைபேசி எண்ணை மட்டுமே இணைத்திருக்கவேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கை வைத்திருந்தால் அனைத்திற்கும் ஒரே தொலைபேசி எண்ணை இணைக்கக்கூடாது. உதாரணமாக வாடிக்கையாளர் ஒருவர் தனது பெயரில் ஒரு கணக்கும், தனது குழந்தையின் பெயரில் ஒரு கணக்கும் (Minor Account) வைத்திருந்தால் இரண்டிற்கும் ஒரே தொலைபேசி எண்ணை கொடுக்காமல் வேறு வேறு தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டும்.