வங்கியில் காசோலை (Cheque Book) எப்படி விண்ணப்பித்து பெற வேண்டும்?
இன்றைய காலத்தில் அனைத்து வேலைகளும் எளிதாகவும் சுலபமாகவும் செய்தலும் அன்று முதல் இன்று வரை வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு காசோலைகள் மிக முக்கிய பங்கு வகுக்கின்றது. காசோலைகள் வியாபார நோக்கத்திற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் தனி நபர் தேவைக்கும் காசோலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. காசோலையை எப்படி வங்கியிடமிருந்து பெற முடியும், அதற்கு என்ன வழிமுறைகள் என்பதை பின்வருமாறு காண்போம்.
1. கீழே தரப்பட்டிருக்கும் லிங்க் (Link) ஐ கிளிக் (Click) செய்து அதில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவேண்டும்.
2. விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் விபரங்கள் அனைத்தும் சரியாக எழுத வேண்டும். விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் கையெழுத்து (Sign) தெளிவாக இருக்க வேண்டும்.
3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) கொடுக்க வேண்டும்.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி வங்கியில் விண்ணப்பம் செய்து காசோலை (cheque book) பெற்று கொள்ளலாம்.
கீழ்க்கண்டவை காசோலை (cheque book) கோரி விண்ணப்பம் செய்வது தொடர்பான கேள்விகளும் பதில்களும்
1. எந்த கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்?
வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் மட்டும் (cheque book) கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
2. வாடிக்கையாளர் வங்கிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமா?
வாடிக்கையாளர் நேரில் வங்கிக்கு சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.
3. விண்ணப்பத்துடன் ஆவணங்கள் ஏதேனும் இணைக்க வேண்டுமா?
விண்ணப்பத்துடன் வாடிக்கையாளரின் ஆதார் அட்டை அல்லது பான் கார்டு மற்றும் வங்கி கணக்கின் பாஸ் புக் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
4. எத்தனை நாட்களில் (cheque book) வழங்கப்படும்?
விண்ணப்பித்த நாளிலிருந்து 1 வாரம் முதல் 10 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் முகவரிக்கு காசோலை (cheque book) வங்கியிலிருந்து அனுப்பிவைக்கப்படும்.
5. ஒவ்வொரு முறையும் காசோலை (cheque book) ஐ விண்ணப்பித்து தான் பெற வேண்டுமா?
வங்கியிலிருந்து வழங்கப்பட்ட காசோலை புக் ல் உள்ள அனைத்து காசோலைகளும் தீர்ந்து விட்டால் புதிதாக விண்ணப்பிக்க தேவை இல்லை. இதற்காகவே தனியாக ஒரு cheque வடிவத்தில் cheque book ல் படிவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதை பூர்த்தி செய்து கொடுத்தாலே புது காசோலை (cheque book) வாடிக்கையாளரின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.