ATM கார்டு பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?



முந்தைய காலங்களில் வங்கி கணக்கில் பணம் போடுவது, எடுப்பது போன்ற வேலைகளை வங்கிக்கு சென்று, Challan எழுதி,  நீண்ட நேரம் செலவிட்டு  செய்து வந்தோம். இது போன்ற அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்  சேவைகளை எளிமையாக்கவே வங்கி நமக்கு ATM சேவையை வழங்குகிறது. ATM சேவையை பயன்படுத்தி ATM கார்டு மூலம் மிகவும் சுலபமாக மிக குறுகிய நேரத்தில் வங்கியில் பணபரிவர்தனை செய்து கொள்ளலாம். தற்போது வங்கி கணக்கு துவங்கும் அனைவருக்கும் ATM கார்டு  வழங்கப்படுகிறது. அவ்வாறு ATM கார்டு பெறாதவர்கள்  வங்கியில் ATM கார்டு கோரி விண்ணப்பிக்க வேண்டும். ATM கார்டு எப்படி விண்ணப்பித்து பெறலாம் என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

 

1.  முதலில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் (Link) ஐ கிளிக் (Click) செய்து அதில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவேண்டும்.  

 

 

2.  விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி வங்கி கணக்கின் விபரம் போன்றவற்றை சரியாக எழுத வேண்டும். விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் கையெழுத்து (Sign) தெளிவாக இருக்க வேண்டும்.

 

3.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) கொடுக்க வேண்டும்.

 

4.  ATM கார்டு கோரி விண்ணப்பித்த பிறகு வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கு ATM கார்டு வழங்கப்படும். ATM கார்டு ஐ பயன்படுத்துவதற்காக  வங்கி அறிவுறுத்தும் வழிமுறைகளை  பின்பற்றி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  

 

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி ATM கார்டு ஐ விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். 

 

பின்வருபவை ATM கார்டு விண்ணப்பித்து பெறுவது தொடர்பான கேள்விகளும் பதில்களும் ....

1.   எந்த கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்?

வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் மட்டுமே ATM கார்டு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

2.  வாடிக்கையாளர் வங்கிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமா?

ஆம். வாடிக்கையாளர் நேரில் வங்கிக்கு சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.

3.  விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?

அனைத்து விபரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வாடிக்கையாளரின் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கின் பாஸ் புக் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

4.   எத்தனை நாட்களில் ATM கார்டு கிடைக்கும்?

  ATM கார்டு விண்ணப்பித்த நாளிலிருந்து 1 வாரம் முதல் 10 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் முகவரிக்கோ அல்லது வாடிக்கையாளரை வங்கிக்கு நேரடியாக வரவழைத்தோ ATM கார்டு வழங்கப்படும்.