வங்கி கணக்கை ஒரு கிளையிலிருந்து வேறு கிளைக்கு மாற்றுவது எப்படி?
அத்தியாவசியமானவை முதல் ஆடம்பரமானவை வரை எல்லா தேவைகளும் நமது இருப்பிடத்திற்கு அருகே கிடைத்தால் தான் அதன் சேவைகளை முழுமையாக அறிந்து பயன்பெற முடியும். அதே போல் வங்கி கணக்கும் நமது இருப்பிடத்திற்கு அருகே உள்ள கிளையில் இருந்தால் மட்டுமே அனைத்து சேவைகளையும் விரைவாக பெறமுடியும். சில நேரங்களில் நமது தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியூர் அல்லது வேறு பகுதிகளுக்கு குடியேற நேர்ந்தால் வங்கி கணக்கையும் அதன் அருகே உள்ள கிளைக்கு மாற்றிக்கொள்ளலாம்.அவ்வாறு ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு வங்கி கணக்கை எப்படி மாற்றுவது? அதற்கு என்ன வழிமுறைகள்? என்பது விரிவாக பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.
1. முதலாவதாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் (Link) ஐ கிளிக் (Click) செய்து அதில் உள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவேண்டும்.
2. விண்ணப்பத்தில் சரியான இடங்களில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி வங்கி கணக்கின் விபரம், எந்த கிளைக்கு மாற்ற வேண்டும் போன்றவற்றை சரியாக எழுத வேண்டும். விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் கையெழுத்து (Sign) தெளிவாக இருக்க வேண்டும்.
3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கியில் உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) கொடுக்க வேண்டும்.
4. கிளை மாற்றக்கோரி விண்ணப்பித்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் வேறு கிளைக்கு வங்கி கணக்கு மாற்றவேண்டும்.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி வங்கி கணக்கை வேறு கிளைக்கு விண்ணப்பித்து மாற்றிக்கொள்ளலாம்.
பின்வருபவை ஒரு கிளையிலிருந்து வேறு கிளைக்கு மாற்றுவது தொடர்பான கேள்விகளும் பதில்களும் ....
1. எந்த கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்?
வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் மட்டுமே வேறு கிளைக்கு மாற்ற கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
2. வாடிக்கையாளர் வங்கிக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமா?
கண்டிப்பாக வாடிக்கையாளர் நேரில் வங்கிக்கு சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும்.
3. எத்தனை நாட்களில் புதிய கிளைக்கு வங்கி கிளைக்கு மாற்றப்படும்?
விண்ணப்பம் கொடுத்து 2 முதல் 3 தினங்களுக்குள் வாடிக்கையாளரின் வங்கி கணக்கை புதிய கிளைக்கு மாற்றப்படும்.
4. வங்கி கணக்கு புதிய கிளைக்கு மாற்றிய பிறகு வாடிக்கையாளர் செய்ய வேண்டியது என்னென்ன?
வங்கி கணக்கை புதிய கிளைக்கு மாற்றிய பிறகு வாடிக்கையாளர் புதிய கிளைக்கு நேரடியாக சென்று கிளையை மாற்றிய தகவலை வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின்பு வாடிக்கையாளரின் விபரங்களும் கணக்கின் விபரமும் வாடிக்கையாளரின் வங்கி Passbook ல் பதிவு செய்து தரப்படும்.
5. வாடிக்கையாளர் தமது கணக்கில் FD, RD கணக்கை வைத்திருந்தால் கிளை மாற்றம் கோரி விண்ணப்பிக்கலாமா?>
விண்ணப்பிக்கலாம். ஆனால் மேற்காணும் விண்ணப்பம் சேமிப்பு கணக்கிற்கு மட்டும் பொருந்தும். வாடிக்கையாளர் FD, RD கணக்கிற்கு தனியாக விண்ணப்பம் செய்து புதிய கிளைக்கு மாற்றி கொள்ளலாம்.
6. வாடிக்கையாளர் வங்கியில் நகை கடன் பெற்று நிலுவையில் இருக்கும் போது கிளை மாற்ற கோரலாமா?
முதலில் நகை கடன் நிலுவை தொகையை முழுவதுமாக செலுத்தி நகையை திருப்பிய பிறகே வேறு கிளைக்கு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
7. வங்கி கணக்கில் ஏதாவது லோன், கடன் நிலுவையில் இருக்கும் போது கிளை மாற்றம் கோரி விண்ணப்பிக்கலாம்?
வாடிக்கையாளர் பெயரில் வங்கி கணக்கில் கடன் தொகை அல்லது இதர லோன் நிலுவையில் இருக்கும் போது கிளையை மாற்ற கோரி விண்ணப்பிக்க முடியாது.