ATM ல் பணம் வெளியே வராமல் கணக்கில் டெபிட் ஆகி விட்டதா? புகார் கொடுப்பது எப்படி?



அவசரமான யுகத்தில் அனைத்தும் வேகமாகவும் விரைவாகவும் இயங்கி கொண்டிருக்கிறது. அது போல வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும் மற்றும் பணத்தை எடுப்பதற்கும் ATM மிகவும் பெரிய பங்காற்றுகிறது. வங்கிக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று பணத்தை டெபாசிட் செய்வதோ அல்லது எடுப்பதோ அந்த காலம். இன்று ATM ல் பணத்தை எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ உடனே பணப்பரிவர்த்தனை முடிந்து அடுத்த நிமிடத்திலேயே வாடிக்கையாளர்களின் தொலைபேசியில் குறுந்செய்தியாக வந்து விடுகிறது. ஆனால் ஏதாவது சில காரணங்களினால் ATM ல் (withdraw) எடுத்த பணம் ATM ல் இருந்து வெளியே வராமல் இருந்துவிடும். மேலும் வெளியே வராத பணம் உங்கள் கணக்கில் இருந்தும் கழிந்து விடும் (டெபிட் ஆகி விடும்).  அவ்வாறு நடந்தால் அந்த பணத்தை மீண்டும் வாடிக்கையாளரின் கணக்கில் எப்படி வரவு வைப்பார்கள்? அதற்கு எவ்வாறு புகார் அளிக்கலாம் என்பதை பின்வரும் வழிமுறைகளில் தெரிந்து கொள்ளலாம்.

 

1.  முதலாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் (Link) ஐ கிளிக் (Click) செய்ய வேண்டும். அதில் உள்ள மாதிரி புகார் ஐ பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவேண்டும்.  

 

 

2.  பின்பு புகாரில் விடுபட்டுள்ள இடங்களில் வாடிக்கையாளரின் சரியான தகவல்கள் அதாவது வாடிக்கையாளரின் பெயர், முகவரி, சேமிப்பு கணக்கின் விபரம், ATM மூலம் பணம் எடுத்த நாள், நேரம் ATM விபரம் போன்றவைகளை சரியாக எழுத வேண்டும். விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் கையெழுத்து (Sign) தெளிவாக இருக்க வேண்டும்.

 

3.  பூர்த்தி செய்யப்பட்ட புகாரை வங்கியில் உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) கொடுக்க வேண்டும்.

 

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி வங்கியில் புகார் கொடுத்து withdraw செய்து ATM லிருந்து வெளிவராத பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வரவு பெற்றுக்கொள்ளலாம்.

 

பின்வருபவை மேற்கூறிய புகார் தொடர்பான கேள்விகளும் பதில்களும்

1.எந்த வங்கியில் புகார் அளிக்கவேண்டும்?

வாடிக்கையாளரின் ATM கார்ட் மற்றும் பணம் எடுத்த ATM இரண்டும் ஒரே வங்கியாக இருந்தால் பணத்தை withdraw செய்த ATM ஐ அதன் அருகில் உள்ள எந்த வங்கி செயல்படுத்துகிறதோ அந்த வங்கியிடம் புகார் அளிக்கவேண்டும். ஆனால் வாடிக்கையாளரின் ATM கார்ட் மற்றும் பணம் எடுத்த ATM இரண்டும் வேறு வேறு வங்கியாக இருந்தால் வாடிக்கையாளர் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் தான் புகார் அளிக்க வேண்டும்.

2. புகாருடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும்?

பூர்த்தி செய்யப்பட்ட புகாருடன் பணம் எடுத்ததற்க்காக ATM இயந்திரத்திலிருந்து வரும் ரசீதை புகாருடன் இணைத்து கொடுக்க வேண்டும்.

3. வாடிக்கையாளரே வங்கிக்கு நேரில் சென்று புகார் கொடுக்கவேண்டுமா?

பூர்த்தி செய்த புகார் மற்றும் ஆவணங்களோடு வாடிக்கையாளரே நேரடியாக வங்கிக்கு சென்று உதவி மேலாளர் அல்லது மேலாளரிடம் (Assistant Manager or Manager) புகாரினை கொடுக்க வேண்டும்.

4. ATM இயந்திரத்திலிருந்து வெளிவராத பணம் வேறு யாருடைய கணக்கில் சேர்ந்து விடுமா ?

ATM ல் withdraw செய்த பணம் வெளியே வராத போது அந்த பணம் வேறு யாருடைய கணக்கிலும் சேராது. வெளிவராத அந்த பணம் ATM இயந்திரத்தில் ஒரு பெட்டிக்குள் பத்திரமாகவே இருக்கும். வாடிக்கையாளர் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரித்து அந்த பணத்தை உரிய வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள்.

5. எத்தனை நாட்களில் கணக்கில் வரவு வைக்கப்படும் ?

 புகார் கொடுத்த 2 முதல் 3 தினங்களில் அதிகாரிகள் ATM இயந்திரத்திலிருந்து வெளிவராத பணம் குறித்து விசாரித்து புகாரின் உண்மை தன்மை பொறுத்து வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஆனால் சில சமயங்களில் ATM மற்றும் புகார் கொடுத்த வங்கியும் வேறு வேறு வங்கியாக இருந்தால் கூடுதலாக சில நாட்களாகும்.