ATM மூலம் எடுத்த பணம் வெளியில் வராமல் கணக்கில் கழிந்தது (debit) தொடர்பாக புகார் கடிதம்



அனுப்புநர்
இராமசாமி,
S/o. சுப்பையா,
No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை.
Mobile – 9876543210
Account No. 567123894
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்,
அண்ணா நகர் கிளை,
சென்னை.
பொருள் : ATM மூலம் எடுத்த பணம் வெளியில் வராமல் கணக்கில் கழிந்தது (debit) தொடர்பாக புகார்
மதிப்பிற்குரிய ஐயா,

நான் தங்களது கிளையில் 567123894 என்ற எண்ணில் வங்கி கணக்கு வைத்துள்ளேன். நான் எனது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ATM கார்டு மூலம் கடந்த 07.05.2021 அன்று அண்ணா நகரில் உள்ள தங்களது வங்கியின் ATM இயந்திரத்தில் ரூ. 10,000/- த்தை withdraw செய்தேன். ஆனால் பணம் ATM இயந்திரத்திலிருந்து வெளியே வரவில்லை ஆனால் பணம் எடுத்ததற்காக ரசீதும் கணக்கிலிருந்து ரூ. 10,000/- கழிந்ததாக (debit) குறுந்செய்தியும் வந்தது. இத்துடன் ATM விபரம் இணைத்துள்ளேன்.

ATM Details:
ATM அமைத்துள்ள இடம் அண்ணா நகர்
பணம் எடுத்த நாள் 07.05.2021
பணம் எடுத்த நேரம் 7.00 P.M

எனவே நான் எடுத்ததாக (withdraw) எனது கணக்கிலிருந்து கழிந்த ரூ. 10,000/- த்தை என்னுடைய கணக்கில் உடனடியாக வரவு வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும்