படித்தவர் முதல் பாமரர் வரை வங்கியில் பணம் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ உள்ள நடைமுறைகள் தெரியாமல் வங்கியில் யாரிடமாவது கேட்டு தான் செய்கிறோம். சரியான கவுண்டர் எது, Challan(பணம் செலுத்தும் படிவம்)-ல் எப்படி எழுத வேண்டும், Denomination (ரூபாய் மதிப்பு)-ல் எவ்வாறு கணக்கிட்டு நிரப்ப வேண்டும் போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. இது போன்ற சந்தேகங்கள் வராமல் எளிமையாக வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய பின்வரும் வழிமுறைகள் பின்பற்றினாலே போதும். அவை என்னென்ன வழிமுறைகள் என்பதை வரிசையாக காண்போம்