CDM ல் செலுத்திய பணம் கணக்கில் வரவு ஆகாதது தொடர்பாக மாதிரி புகார் கடிதம்



அனுப்புநர்
இராமசாமி,
S/o. சுப்பையா,
No. 25, மன்னர் திருமலை நாயக்கர் தெரு,
பெசன்ட் நகர்,
சென்னை.
Mobile – 9876543210
Account No. 567123894
பெறுநர்
உயர்திரு மேலாளர் அவர்கள்
இந்தியன் வங்கி,
பெசன்ட் நகர் கிளை,
சென்னை.
பொருள் : CDM மூலம் டெபாசிட் செய்த பணம் கணக்கில் வரவு ஆகாதது தொடர்பாக புகார்
மதிப்பிற்குரிய ஐயா,

நான் தங்களது கிளையில் 567123894 என்ற எண்ணில் வங்கி கணக்கு வைத்துள்ளேன். நான் கடந்த 05.05.2021 அன்று பெசண்ட் நகர் CDM ல் என்னுடைய கணக்கில் ரூ. 5,000/- த்தை டெபாசிட் செய்தேன். ஆனால் என்னுடைய கணக்கில் டெபாசிட் செய்த பணம் இன்னும் வரவு வைக்கப்படாமல் உள்ளது. பணம் டெபாசிட் செய்த CDM மற்றும் Denomination பற்றி கீழே விவரமாக குறிப்பிட்டுள்ளேன்.

Denomination விபரம்

ரூபாய் நோட்டு

தொகை

2000 x

500 x

10

5000

200 x

100 x

Total

5000

பிற விவரங்கள்:

CDM அமைந்துள்ள இடம்

பெசண்ட் நகர்

டெபாசிட் செய்த நாள்

05.05.2021

டெபாசிட் செய்த நேரம்

11.00 A.M

எனவே நான் டெபாசிட் செய்த பணம் ரூ. 5,000/- என்னுடைய கணக்கில் உடனடியாக வரவு வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

இந்த கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும்